Header Ads



இலங்கையில் தனிநபர் ஒருவரின், கடன் 11 இலட்சம் ரூபாவாக உயர்வு


இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 793,888 ரூபாவாக இருந்தது.


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரச் சுட்டெண்ணின்படி, 2022 ஒகஸ்ட் மாத இறுதியில் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 24,69 பில்லியன் ரூபா அல்லது 24 டிரில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


இதில் உள்நாட்டுக் கடன் 13,119.4 பில்லியனும், வெளிநாட்டுக் கடன்கள் 11,574 பில்லியனும் அடங்கும்.


தனிநபர் கடன் சுமையின் கணக்கீடு வருடாந்த மொத்தக் கடனை சராசரி வருடாந்த சனத்தொகையால் பிரிப்பதன் மூலம் கணக்கிடப்படுகின்றது. அதன்படி இந்நாட்டில் தனிநபர் கடன் சுமை 11 இலட்சத்து 14,551 ரூபாவாகும்.


இதேவேளை, அரசாங்கத்தின் வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் இன்று (13) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.


இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.


அத்துடன், இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம், ஏற்றுமதி வருமானத்தை கொண்டு வருவதற்கு முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கோரி ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வலியுறுத்தியிருந்தது.

No comments

Powered by Blogger.