Header Ads



இஸ்லாமிய, முஸ்லிம் விகாரங்கள் குறித்து அமைச்சர் விதுரவுடன் YMMA பிரதிநிதிகள் சந்திப்பு


 (அஷ்ரப் ஏ சமத்)


வை.எம்.எம். ஏ அமைப்பின் தலைவா் ,இஹ்சான் ஏ ஹமீட், தலைமையிலான   செயற்குழு உறுப்பிணா்களும் நேற்று 16ஆம் திகதி  புத்தசாசன மதவிவகாரங்கள் , கலாச்சார அமைச்சருமான  விதுரவிக்கிரமநாயக்காவினைச்  அவரது அமைச்சில் வைத்துச் சந்தித்தனா்.  இச் சந்திப்பின்போது முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளா் ்இபறாஹிம் அன்சாா் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனா்.


இச் சந்திப்பில்  இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மத விவகாரப் பிரச்சினைகள் கலந்தாலோசிக்கப்பட்டன. 


சகல  பள்ளிவாசல்கள் ஜூம்ஆத் தொழுகை அனுஷ்டித்தல், குர்ஆன் பாடசாலைகளில்    மீள ஆரம்பிப்பதற்கும் அவற்றுக்கான குர் ஆன் பாடத்திட்டம் ,பற்றி உரிய குழு துரிதப்படுத்துதல்,  மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்வதற்காக இருக்கும் தடைகளை மீள ஆராய்தல், பள்ளிவாசல்கள் பிரச்சினைகள்? வக்பு சபை நடவடிக்கைகள், மற்றும்  இஸ்லாமிய கலாச்சார  விவகாரப் பிரச்சினைகளும் இங்கு  ஆராய்யப்பட்டன.  மேற்படி கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சா் முஸ்லிம் சமய விவகாரப் பணிப்பாளருக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஆலோசனைகளை வழங்கினாா். 

No comments

Powered by Blogger.