Header Ads



மூடிய அறையில் RAW-வின் தலைமை இரகசியமாக கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்ததா..?


ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி Samant Kumar Goel கொழும்பிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக நம்பகரமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக காலைக்கதிர் – ePaper செய்தி வௌியிட்டுள்ளது.


கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி, மூடிய அறையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.