சாப்பிட்டால்தான் மலசலக்கூடம் தேவை, சாப்பாடு இல்லாவிட்டால் மலசலக்கூடங்கள் எதற்கு..? கறுப்பு உடையில் வந்து உரையாற்றிய Mp
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலைய மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன், தான் ஏன்? கறுப்பு நிறத்திலான ஆடையை அணிந்துவந்துள்ளேன் என்பதற்கு விளக்கமளித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் குழுநிலை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
இந்த வரவு- செலவுத்திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக ஒரு சதமும் ஒதுக்கப்படவில்லை. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கண்டித்துமே, தான் கறுப்பு ஆடையை அணிந்து வந்துள்ளேன் என்றார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள், அண்ணியசெலாவணியை ஈட்டித்தருகின்றனர். எனினும், அவர்களின் உழைப்பை கம்பனிகள் சுரண்டிக்கொண்டிருக்கின்றன என்றார்.
அதேபோல, மலையகத்தில் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்ட மலசலக்கூடங்களின் நிர்மாணப்பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
சாப்பிட்டால்தான் மலசலக்கூடம் தேவை. சாப்பிடவே வழி இல்லாத நிலையில், மலசலக்கூடங்கள் தேவையில்லை என்றார்.
Post a Comment