கொழும்பு துறைமுக நகரத்தில் (Duty free mall) அடுத்த வருடம் திறக்கப்படவுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையில்லா வணிக வளாகம் (duty free mall) அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படவுள்ளது.
இதில் உலகின் மூன்று முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்குவதுடன், இது தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய தீர்வையில்லா வணிக வளாகமாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் குறித்த வணிக வளாகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்வையற்ற வணிய வளாகத்தின் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் ஈர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்வையில்லாத வணிக வளாகத்தில் நடைபெறும் விற்பனையில் இலாபமும், ஏனைய வருமானங்களும் யாரைப் போய்ச் சேரும். அந்தப் பணம் இலங்கை அரசாங்கத்தை வந்தடையாவிட்டால், சீனாவுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் அந்த வருமானங்கள் போய்ச் சேர்ந்தால் அவற்றால் எமக்கு அல்லது எமது நாட்டுக்கு எந்தப் பயனுமில்லை. அவற்றைச் சரியாக ஆய்வு செய்து அரசாங்கத்துக்கு அவை கிடைக்காவிட்டால் அவற்றுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். கோடான கோடி டொலர்களை கமிசனாக எடுத்துக் கொண்டு முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமுமம் மக்களுக்கும் நாட்டுக்கும் எதிராகச் செயற்படுவதை பொதுமக்கள் தான் தடுக்கவேண்டும். ஏனெனில் அரசில் இருக்கும் மகோடிஸ்கள் அனைவரும் ஊழல்காரர்கள். அவர்களின் சட்டவிரோதச் செயல்களால் நாடு அடைந்திருக்கும் நட்டமும்,இழப்பும் இனியும் போதும் இதன் பிறகாவது இத்தகைய ஊழல்கள் நடைபெறுவதைத் தடைசெய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலப் பரம்பரையினருக்கு இந்த நாடு இல்லாமல் போய்விடும்
ReplyDelete