நாட்டில் உள்ள ஏதாவது ஒன்றை விற்று, கடனை வாங்கி சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் ரணில் நினைக்கிறார்
நாட்டில் உள்ள ஏதாவது ஒன்றை விற்று கையிருப்பில் மூன்று அல்லது நான்கு பில்லியன் பணத்தை போட்டுக்கொண்டு தரப்படுத்தலில் மேல் நோக்கி வந்த பின்னர் கடனை வாங்கி சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் என தற்போதைய ஜனாதிபதி நினைப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று -30- வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சூத்திரத்தின் மூலம் முன்நோக்கி செல்ல முடியாது. இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சு என்பன தனித்தனியாக நிதி முகாமைத்துவம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கின்றன.
கைத்தொழிலாளர்களை பாதுகாப்பதன் மூலமே நிதி கட்டமைப்பை பாதுகாத்துக்கொள்ள முடியும். வட்டி வீதம் அதிகரித்துள்ளதால், கைதெ்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை பாதுகாப்பதிலேயே நாட்டின் நிதி கட்டமைப்பின் பாதுகாப்பு தங்கியுள்ளது. தவறான நிதி முகாமைத்துவ கொள்கையில் இருந்து விடுப்படும் வரை இலங்கையை கைத்தொழில் துறை நோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் விமல் வீரவங்ச கூறியுள்ளார். tw
Post a Comment