யூ டியூப் பார்த்து ஸ்னைப்பர், துப்பாக்கியை தயாரித்தவர் கைது
யூடியூபில் (youtube) காணொளிகளை பார்த்து இராணுவ ஸ்னைப்பர் துப்பாக்கியை போல் துப்பாக்கியொன்றை தயாரித்தவர் வாத்துவ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
மேலும், இத்துப்பாக்கி நான்கு அடி நீளம் கொண்டதெனவும் சந்தேகநபர் தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி சில காலமாக குணமடைந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாகங்கள், வெள்ளி பாகங்கள், ஸ்பிரிங், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்கள் ஆகியவை துப்பாக்கியை தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகவும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி மூலம் தொலைநோக்கி பொருத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பூனைகள், நாய்கள் மற்றும் பறக்கும் பறவைகளை துப்பாக்கிக்காக சிறிய இரும்புப் பந்துகளைப் பயன்படுத்தி சுட்டதாகவும், சுடப்பட்ட விலங்குகள் அதே இடங்களில் விழுந்து இறந்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் குறித்த சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ibc
Post a Comment