Header Ads



'பறக்கத் தெரியாத பறவைகள்' தேசிய விருது பெற்றது


கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் 'பறக்கத் தெரியாத பறவைகள்'சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.


புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பிரதேச செயலக மட்டம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்திலும் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களுக்கிடையே தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நடைபெற்றது.


இதன் போது சிறுவர் கதையாக்கப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற கவியரசி செய்யது அஹமது இஸ்மத் பாத்திமாவின் 'பறக்கத் தெரியாத பறவைகள் 'சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருதாக தங்கப்பதக்கத்தையும், ரூபா பத்தாயிரம் காசோலையையும், சான்றிதழையும் அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர வழங்கி கௌரவித்தார்.


இதன் போது பாராளுமன்ற உறுப்பினரும்,புத்தசாசன,மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சருமான விதுர விக்கிரமநாயக்க மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோரும் பங்கேற்றனர். கவியரசி செய்யது அஹமது இஸ்மத் பாத்திமா மேல் மாகாணம் பஸ்யால மினுவங்கொட எல்லமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலய அதிபராவார்.


பி.எம்.எம்.ஏ. காதர்...

1 comment:

  1. கவியரசி செய்யது அஹமது இஸ்மத் பாத்திமாவின் 'பறக்கத் தெரியாத பறவைகள் 'சிறுவர் கதையாக்கத்திற்கு முதல் பரிசு பெற்று அரசாங்கத்தின் தேசிய கௌரவத்தையும் பெற்றுக் கொண்ட அதிபர் இஸ்மத் பாத்திமா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும், அன்னாரின் பணி மென்மேலும் மேலோங்கி சமூகமும் நாடும் அதனால் பயனடைய வேண்டும் என மனமாரப் பாராட்டுகின்றோம். ஒரு தாயாகவும், அதே நேரத்தில் பாடசாலை அதிபராகவும் கடமையாற்றிக் கொண்டு இலக்கியத்துறையிலும் சிறந்து விளங்க, தேசிய ரீதியில் போட்டி போடுவதென்பது சாதாரண விடயமல்ல. அதற்காக கடும் உழைப்பும் தியாகமும் குடும்பத்தின் உதவியும் ஆதரவும் தேவை. அத்தகைய ஒரு வாய்ப்பைப் பெறுவதே பெரும் பாக்கியமாகும். அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் பரக்கத்தாக்கி வைப்பானாக. ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.