Header Ads



கஞ்சா பயிரிட அனுமதிக்க மாட்டோம் - ஓமல்பே சோபித தேரர் சூளுரை


நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்வென கூறி எம்லிப்பிட்டிய பிரதேசத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிரிட பிரதேசத்தில் உள்ள பௌத்த பிக்குகள், பௌத்த மக்கள் எந்த வகையிலும் இடமளிக்க மாட்டார்கள் என இலங்கை ராமஞ்ஞைய பௌத்த பீடத்தின் தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்கர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.


எம்பிலிப்பிட்டியவில நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


எம்பிலிப்பிட்டியவை கடந்த கால நிலைமைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது. எம்பிலிப்பிட்டிய பௌதீக வளங்கள் மூலம் வேகமாக முன்னேறி வரும் நகரமாக மாறியுள்ளது. எம்பிலிப்பிட்டிய குறித்து கடந்த காலங்களில் தவறான பார்வை இருந்தது.


அப்போது இந்த பிரதேசம் கஞ்சா, மலேரியா நோய், கூலி தொழிலாளர்களை வழங்கும் நிலையமாக இருந்தது. வேட்டை இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் பிரபலமாக இருந்தது. அந்த கடந்த கால நிலைமை பௌத்த மதத்தின் வழிக்காட்டலை பெற்று மாற்றமடைந்தது.


அந்த காலத்தில் நாங்கள் பயணங்கள் செல்லும் போது எம்லிப்பிட்டிய பிரதேசம் என்று கூறினால், தரக்குறைவாக பார்ப்பார்கள். எனினும் பிற்காலத்தில் ஆன்மீக முன்னேற்றம், பௌத்த சூழலால் மாறியது.


இவ்வாறான நிலைமையில் மீண்டும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை கஞ்சா புரியாக மாற்றும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது. கஞ்சா பயிரிடுவதற்காக எம்லிப்பிட்டிய பிரதேசத்தில் 10 ஆயிரம் ஏக்கர் காணியை ஒதுக்க உள்ளதாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் அண்மையில் கூறினார்.


எனினும் ஜனாதிபதி இதனை கஞ்சா என்று கூறவில்லை. த்ரைலோக்க விஜய பத்ர என்று கூறுகிறார்.நன்கு படித்த புத்திசாலிகள் அந்த பெயரை சூட்டியுள்ளனர். த்ரையேலோக்க விஜய பத்ர என்பது மூன்று உலங்களை வென்றது என்று பொருள்.


கஞ்சாவை புகைத்து போதை ஏறிய ஒருவர் தான் மூன்று உலகத்திற்கும் தலைவர் என்று நினைப்பார் எனவும் ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார். tw

No comments

Powered by Blogger.