Header Ads



மீண்டும் எரிபொருளுக்கு வரிசை - அமைச்சர் தெரிவித்துள்ள விடயம் என்ன..?


 தற்போது நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசையை காண முடிகின்றது.


இந்நிலையில், அடுத்து வரும் இரண்டு நாட்களில் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என இலங்கை பெட்ரோலிய பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.


நீர்கொழும்பு நகரில் இன்று CEYPETCO மற்றும் IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது. இரண்டு நாட்களாக அங்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


கம்பஹா, காலி, மாத்தறையிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


எரிபொருளை முற்பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டதாக இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்தது. 

 

இந்நிலையில், எரிபொருள் வரிசை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளுக்கு முற்பதிவு செய்யவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.


எனினும், இந்த வாரத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். 


போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.