உலகில் அதிக அபாயம் உள்ள நாணயமாக, இலங்கை ரூபா - ஜப்பான் எச்சரிக்கை
உலகில் அதிக நாணய அபாயம் உள்ள ஏழு நாணயங்களில் இலங்கை ரூபாயும் ஒன்று என ஜப்பானிய நிதி நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நாட்டின் முன்னணி தரகு மற்றும் முதலீட்டு வங்கியான நொமுரா நிதி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையைத் தவிர, எகிப்து, ருமேனியா, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் நாணயங்களும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாணயங்களாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
Post a Comment