மிக மோசமான வன்முறையை, ரணில் கட்டவிழ்த்து விடப்போகிறார் - ரணில்
சிங்கள மக்களை - சிங்கள இளைஞர்களை கொலை செய்வதற்காக, பகிரங்கமான ஒரு ஆணையை அதிபர் ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி மூலம் வழங்கி வைத்திருக்கிறார்.
இதன் மூலம் மிக மோசமான இராணுவ வன்முறையை இந்த நாட்டிலே கட்டவிழ்த்து விடப்போகிறார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அவர், “விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த நாட்டினுடைய படைத்தரப்புக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் தன்னை ஹிட்லர் போன்று காண்பிக்க முனைவதாக பத்திரிகைகள் எல்லாம் அவரைப் பற்றி சொல்கின்றன.
நான் நினைக்கிறேன், இந்த நாட்டிலே ஒரு காலத்தில் தமிழர்களை கொன்றொழித்த படைகள், தமிழர்களை கொலை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த படைகள் இன்று சிங்கள மக்களை கொலை செய்வதற்காக - சிங்கள இளைஞர்களை கொலை செய்வதற்காக திசை திருப்பப்படுகிறார்கள்.
இவர் அதிபராக வருகிற பொழுது பலர் - இவர் என்ன செய்வார், இவருடைய நடவடிக்கைகள் எவ்வாறு அமையும், இவர் எப்படிப்பட்டவர் என்ற விடயங்களை எல்லாம் சொன்னார்கள்.
சொன்னதன் அடிப்படையில் தான் இன்று அதே விடயத்தை சிங்கள இளைஞர்களை கொலை செய்கின்ற பாணியிலே அவர் ஆரம்பித்திருக்கிறார்.
இன்றைய அதிபர் தான் 1989 ஆம் ஆண்டு இந்த நாட்டிலே நடந்த பல்வேறுபட்ட சம்பவங்களில் ஜேவிபி இளைஞர்களை கொலை செய்தார். பெரிய புதை குழியை வைத்திருந்தார் என்ற செய்திகள் கூட இருக்கின்றன.
இவர் சித்திரவதை முகாம் அல்லது கொலை முகாம்களுக்கு பொறுப்பாக இருந்த ஒருவர். இப்போது திரும்பவும் அதே பாணியில் நகர்வுளை ஆரம்பித்துள்ளார்.
அன்புக்குரிய சிங்கள இளைஞர்களே, யுவதிகளே இந்த நாட்டினுடைய அதிபர் உங்களை கொல்லப் போகிறார். அவர் கொலைக்கான வாசலை தான் திறக்கின்றார்.
இந்த நாட்டினுடைய அதிபர் ஆயுதப் படைகளை வைத்து 1989 ஆம் ஆண்டு ஆண்டிலே செய்தததைப் போன்று, 2009 ஆம் ஆண்டு தமிழர்கள் மீது நடந்ததைப் போன்று மிக மோசமான ஒரு இராணுவ வன்முறையை இந்த நாட்டிலே கட்டவிழ்த்து விடப்போகிறார் என்பதற்கு இது கட்டியம் சொல்லி இருக்கிறது.
ஆகவே மிக மோசமான ஒரு நகர்வை நோக்கி இந்த நாடு செல்கிறது” என்றார்.
Post a Comment