Header Ads



மல்கம் ரஞ்சித்தின் காரசாரமான பேச்சு


- Ismathul Rahuman -

 உங்கள் வீட்டுப் பிரச்சினயை தீர்ப்பதற்கு நான் அரசியல் வசதியுமல்ல மந்திரியுமல்ல நீங்கள் தெரிவு செய்த உறுப்பினர்களிடம் போய் கேளுங்கள்  என கொழும்பு பேராயர் கார்தினல் மெல்கம் ரன்ஜித் உலக வதிவிட திணத்தை முன்னிட்டு நீர்கொழும்பு ருக்மனி தேவி மண்டபத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றும் போது  கூறினார்.

    நீர்கொழும்பு மக்கள் ஒன்றிய அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பேராயர் மெல்கம் ரன்ஜித் தொடர்ந்து உரையாற்றுகையில்

 சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப நிலத்தை காணியை பெறுவது சிரமம்.  இதனால் வீடு ஒன்றை கட்டவும்  நிலத்திற்கான உரிமையை பெறும் சந்தர்பங்களும் மட்டுப்படுத்தப்படுகின்றன. அதனால்தான் வெளிநாடுகளில் தொடர் மாடி வீட்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தகின்றனர். மக்கள் தொழிலுக்காகவும் வசிப்பிடத்திற்காகவும் நகரத்தை நோக்கி நகர்வதனால் நகரத்தில் நெரிசல் நிலமை ஏற்பட்டு இடவசதி குறைகின்றன.

   இலங்கையின் சனத்தொகைக்கு ஏற்ப வீடுகளை பெற்றுக்கொள்வது கேள்விக்குறியாகவுள்ளன.

      வீடில்லாப்  பிரச்சினயை

 தீர்ப்பதில் முதல் பொறுப்பு நாம் நியமிக்கும் அரசுக்கு உள்ளது.     இலங்கையில் வீடில்லாதவர்களுக்கு வீடு கொடுக்கும் திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பு. இது தொடர்பாக அரசாங்கம் திட்டமிடல் வேண்டும். இது தொடர்பாக மதிப்பீடு செய்து வீடில்லாத எத்தனை குடும்பங்கள் உள்ளன வாடகை வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிபரம் தேவை. சகல அரசும் இந்தத் தவறைவிட்டுள்ளன.

  நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளன.நகர அபிவிருத்தி அமைச்சர் கம்பஹா மாவட்டத்திலே

 உள்ளார். இது தொடர்பாக திட்டம் உள்ளதா என்று தெரியாது.

    நகர அபிவிருத்தி அதிகார சபை தொடர் மாடி வீடுகளை வெளிநாட்டவர்களுக்கு டொலர்களுக்கு விற்பனை செய்வதாக அண்மையில் கண்டேன். வீடுகளை கட்டிக்கொடுப்பது வெளிநாட்டவர்களுக்கா? எமது நாட்டவர்களுக்கா ? இவர்களுக்கு உள்ளது டொலரின் கவலையே.

    எமது நாட்டில் காணிக் கொள்கை உள்ளதா?. மகவலி வலயத்தில் பல்வேறு காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு குத்தகைக்க கொடுக்கின்றனர்.நாட்டு மக்களின் தேவைகளை புறந்தல்லிவிட்டு எம்மை ஆளுகின்றனர். நாம் வாக்களித்து நியமித்தவர்கள் மக்கள் தொடர்பாக கருனை காட்டுவதில்லை.

   முன்பு வட்டாரம்,தொகுதி முறை இருந்த போது தமது பிரதேச மக்களை தேடிச்சென்று வேலை செய்தனர். தற்போது முழு மாவட்டத்திற்கும் செல்ல  வேண்டியுள்ளதனால்  தேர்தலுக்கு கோடிக்கணக்கில் செலவுசெய்வதற்காக மோசடிக் காரர்களுடன் இணைந்து வாக்குத் தேடுகின்றனர். 

     1978 பின்னரே இந்த நிலமை ஏற்பட்டது. எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியவற்றையும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் நிலமையை ஏற்படுத்தினார். சிறிமாவோ பண்டாரநாயக்க அரசு 76 -77  காலப்பகுதியில் தேவையான அரிசி,மரக்கறி போன்றவற்றை உற்பத்தி செய்ய உச்சாகப்படுத்தினர். அவரின் காலத்தில் டொலரின் பெறுமதி 20 ரூாவை தாண்டவில்லை. தற்போது 300 ரூபாவை தாண்டியுள்ளது.

   நாட்டின் தலைவர்கள் நாட்டைக்  காட்டிக்கொடுத்துள்ளனர். தலைவர்கள் எடுத்த கொள்கை தீர்மாணங்களினால் வெளிநாட்டுகளிடம் கையேந்த வேண்டிய நிலமையை ஏற்படுத்தி  பிச்சைக் காரர்களாகியுள்ளனர்.

  78 காலப்பகுதி அரசே இந்த நாட்டின் மோசடியான அரசு.  அக்காலப் பகுதியில்தான் நாட்டில் மாற்றம் ஏற்பட்டது. சரியான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் வீடட்டிற்கு கல் எறிந்தார்கள். சிறு பிரச்சிணையாக இருந்த வடகிழக்கு பிரச்சிணையை பூதாகரமாக்கினர்.83 கலவரத்தின் மூலம் முழு நாட்டிற்கும் சேறு பூசப்பட்டது. அந்த அரசு தான் அமைப்பு ரீதியாக தமிழர்களை தாக்கினார்கள். நாட்டின் சமாதானத்தை அமைதியை உடைத்தெறிந்தார்கள்.  சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தி ஆட்சியை நீடித்துக் கொண்டார்கள். சகல விடயங்களுக்கு லஞ்சம், கமிஷன் எடுக்கும் முறை உறுவாக்கப்பட்டது. மந்திரிமாரிடம் திகதி குறிப்பிடாத இராஜினாமாக் கடிதங்களை எடுத்தனர்.       இந்தியா,சீனா,அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன்,ஐஎம்எப் என்பவற்றிற்கு தலை குனியவைத்தவர்கள் யார்?. இதனால்தான் எமது  பிரச்சிணைகளுக்கு தீர்வுகான முடியாதுள்ளது.

     மக்களின் பிரச்சினயை

 தீர்க்க முடியாத அரசாங்கம் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

     எனக்கு கையளித்த புத்தகத்தில் பிரச்சினயை

 தீர்த்துதருமாறு கேட்டுள்ளீர்கள். நான் எப்படித் தீர்பது? நான் அரசியல்வாதியுமல்ல உங்கள் மந்திரியுமல்ல.

  நீங்கள் தேர்ந்தெடுத்த மந்திரிமார், மாநகர முதல்வர்,உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் கேளுங்கள்.    வீடில்லாதவர்களுக்கு நீர்கொழும்பு மாநகர சபை என்ன செய்துள்ளது. குடிசைகளில் வாழ்பவர்களுக்கு தொடர்மாடி வீட்டுத் திட்டங்களுக்கு திட்டமிட்டுள்ளார்களா? குறைந்தபட்சம் இது தொடர்பாக பேசியுள்ளார்களா?.

    அரை போத்தல்  ,சாராயத்திற்கும்  500 ரூபா நோட்டுக்கும் வாக்களிக்காமல்  வாக்குச் சாவடிக்குச் சென்று சிந்தித்து வாக்களியுங்கள்.

 அரசியலமைப்பை சீர்திருத்துவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அது தொடர்பாக யாரிடமும் கேட்டறியாமல் அவர்களின் கருத்திற்கு இனங்க அரசியலமைப்பை தயாரித்துள்ளார்கள். அதன் பிரதி ஒன்று எனக்கும் கிடைத்தது. அதனை அமுல்படுத்தினால் நாடு நாசம். ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்தவே அதில் உள்ளன. எமது வாய்களுக்கு பூட்டுப் போடப்படும்.

  வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியவர்கள் அங்கு சண்டையிடுகின்றனர். இரு பக்கமும் கள்வர்கள் என சொல்லிக்கொள்கின்றனர். அதிலிருந்து விழங்குவது இருசாராரும் கள்வர்களே.

  அதிவேக வீதிகள் தேவையில்லை. வீட்டுப் பிரச்சிணையை தீருங்கள். கமிஷன் கிடைப்பதனால்தான் அதிவேக வீதிகளை நிர்மாணிக்கின்றனர். இவர்களுக்கு மக்கள் தொடர்பாக பாசமில்லை. இதனால்தான் இளைஞர்கள்,யுவதிகள் போராட்டம் செய்தனர். வாக்குக் கேற்க ஒருவரையும் வீட்டிற்கு வரவிட வேண்டாம்.

 எம்மால் முடியுமான முறையில் உதவி செய்வோம். உங்கள் துன்பம்,வேதனைகளை உணர்வதனில்தான் நாம் குரல்கொடுக்கிறோம்.

No comments

Powered by Blogger.