அரசாங்கம் கையாளும் கொள்கை முற்றிலும் முட்டாள்தனமானது - எதிர்க்கட்சித் தலைவர்
அரச பொது கொள்முதல் செயல்முறைக்கு பதிலாக தனியார் முறையை அறிமுகப்படுத்தி அரசாங்கம் பணத்தை சுரண்டும் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும்,இந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இந்நாட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட சிவில் போராட்டத்தை வன்முறையுடன் ஒப்பிடுவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும்,மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் போன்றவற்றுக்கு முகங்கொடுத்து எழுந்த நிலையே மக்களின் போராட்டம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதனை ஒடுக்குவதற்காக மஹிந்த ராஜபக்சவே வன்முறையைக் கொண்டு வந்தார் எனவும் தெரிவித்தார்.
நமது நாடு வக்குரோத்தான நாடு எனவும்,சர்வதேச அளவில் அவதனாத்தை செலுத்தும் நாடாக நமது நாடு மாறியுள்ளதாகவும்,நமது நாடு ஏலம் விடும் ஒரு நாடாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எமது நாட்டிலுள்ள இடங்கள்,நம் நாட்டின் வளங்களை அற்ப விலைக்கு விற்க தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாகவும்,சர்வதேச நாடுகள் மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனங்களும் நமது நாட்டைக் குறிவைத்து,வளங்களைச் சாதகமான விலையில் பெறக்கூடிய உத்திகளை லாவகமாக செயற்படுத்தி வருவதாகவும்,இது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் தெரிவித்தார்.
இருக்கும் பொருளாதாரத்தை சுருக்கி,சிறு தொழில் முயற்சியாளர்களை இல்லாமலாக்கும் கொள்கையையே தற்போதைய அரசாங்கம் செயற்படுத்தி வருவதாகவும்,வட்டி விகிதத்தை 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் இதன் பின்புலத்திலாகும் எனவும் தெரிவித்தார்.
இதனால்,புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வாய்ப்பில்லாமல் போகும் எனவும்,பொருளாதார செயல்முறை சுருங்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.அரசாங்கம் கையாளும் பொருளாதார சுருக்கக் கொள்கை conomic contraction முற்றிலும் முட்டாள்தனமானது எனவும் தெரிவித்தார்.
88,89 இல் நாடு நெருக்கடியை எதிரநோக்கிய தருணத்தில் மறைந்த ரணசிங்க பிரேமதாஸ பொருளாதாரத்தை சுருக்கும் கொள்கையை கடைப்பிடிக்கவில்லை எனவும்,இரு பெரும் உள்ளக பிரச்சினைகள் நாட்டில் நிலவிய போதும் மக்கள் மத்தியில் பணபுழக்கம் காணப்பட்டதாகவும்,முதலீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும்,புதிய வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த பொருளாதாரக் கொள்கையானது மக்களின் வாழ்க்கையை சுருக்கி, மக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி,சுருக்கமாகச் சொன்னால்,ஜீவனோபாயம் நடத்த முடியுமானவர்களை வறியவர்களாக்கும் இந்த பொருளாதாரக் கொள்கையையே ஜனாதிபதி கையாள்வதாகவும் இதற்கு தாம் முற்றிலும் எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறும் ஜனாதிபதியே மறுபக்கம் வரி விதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தொம்பே தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment