Header Ads



நிம்மதியாக உள்ளேன் - பசில் அறிவிப்பு


21வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் ஊடாக தனக்கு நிம்மதி கிடைத்துள்ளதாகவும் பிரதான பொறுப்புகள் சிலவற்றில் இருந்து மீள கிடைத்தமை நிம்மதியானது எனவும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


சிங்கள பத்திரிகைக்கு ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.


21வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினேன். தனிப்பட்ட ரீதியில் அந்த முடிவை எடுத்தேன்.


21வது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட்டமை நான் எடுத்த முடிவை அங்கீகரிப்பதாகும். ராஜபக்ச குடும்பத்தினருக்காக நாங்கள் படுபடுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.


அது உண்மை. நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். நான் ராஜபக்சவாதி.குடும்பவாதி. அதில் இருந்து விடுப்பட முடிந்துள்ளது. தற்போது மகிந்த ராஜபக்சவுடன் மாத்திரமே எனது பிணைப்பு உள்ளது.


பிரதேச சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள மொட்டுக்கட்சியினரை பாதகாப்பது எனது கடமை. அதற்காக நான் நேரடியாக அரசியலில் ஈடுபடுவேன்.


அவர்களே கட்சியை ஆரம்பித்தனர். அவர்களே முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். அவர்கள் எங்களுடன் இருந்தனர். அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் நேரடியாக அரசியலில் ஈடுபடுவேன்.


சட்டப்படி நான் பதவிகளை வகிக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினராக வரவும், அமைச்சு பதவியை பெறவும் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவிக்கு வருவதற்காக நான் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடுகின்றேன் என்று என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. சட்டப்படி நான் அந்த பதவிகளுக்கு வர முடியாது எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். TW

1 comment:

  1. இவனுடைய முகத்தைப் பார்த்தால் தெரிகிறது மகிழ்ச்சியுடன் அவர் இருக்கின்றாராம். ஆம், இந்த நாட்டின் கோப்பிக்கடை முதலாளி முதல் மாபெரும் மொத்தவியாபாரிகள் வரை அனைவரையும் பொதுமக்களைச் சுரண்டும் மாபெரும் கள்வர்களாகவும், பொதுமக்களைச் சுரண்டும் சுரண்டல் வாதிகளாகும் மாற்றி அவர்களிடம் கப்பம் பறித்துக் கொணடு கோடான கோடி டொலர்களை உலகில் பலமூளைமுடுக்குகளிலும் பதுக்கிவைத்துவிட்டு இப்போது இவர் நிம்மதியாக அரசியல் செய்கின்றாாம். மக்களைச் சுரண்டி பொதுச் சொத்துக்களைக்களவாடி உலகில் எந்த ஒரு மனிதனும் நிம்மதியில் இருப்பதாகக் கூறினால் பொய்யிலேயே வாழும் இவனுக்கு மூளைக் கோளாறும் மனநோயும் இருக்கின்றது. இவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இந்த நாட்டில் நல்ல, நியாயமாகச் சிந்திக்கும் மக்கள் இல்லையா? இது என்ன ஆச்சரியம்.

    ReplyDelete

Powered by Blogger.