குளவிக் கொட்டுக்கு இலக்காகி மூதாட்டி உயிரிழப்பு
புசல்லாவை பழைய தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புசல்லாவை – டெல்டா பழைய தோட்டத்தை சேர்ந்த 72 வயதான மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 10 ஆம் திகதி காலை அவரது வீட்டின் அருகில் விறகு சேகரிக்க சென்றிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததுடன், அவரது இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன.
புசல்லாவை பழைய தோட்டத்திலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில் அதிகளவிலான குளவிக்கூடுகள் காணப்படுவதுடன், குளவிக் கொட்டுக்கு இலக்காகி இதுவரையில் 5-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அன்றாடம் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாம் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் கவலை வௌியிட்டனர்.
Post a Comment