Header Ads



பசிலை பின்தொடரும் சர்ச்சை - விமான நிலையத்திலிருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள்


ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


பசில் அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், விமான நிலையத்தில் பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை.


பசில் ராஜபக்சவின் பிரமாண்ட வருகைக்காக விமான நிலையத்தில் விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான கட்டணமும் செலுத்தப்படவில்லை.


மேலும், பசில் விமான நிலையத்தில் Gold Route சேவையை பெற்றிருந்தார். இதற்காக ஒரு நபருக்கு 200 அமெரிக்க டொலர் அறவிடப்படும். எனினும் இதையும் அவர் செலுத்தவில்லை.


இன்றுவரை பணம் செலுத்தாமல் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் VIP ஓய்வறையை பயன்படுத்தியதை விமான நிலையத்தின் உள் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.  

1 comment:

  1. The strange thing is that no body not even the highest security offficers have back bornes to levy the airport VIP charges spent on a normal bilingual citizen. If Ranil has backborn he should order the staff concerned to charges with viloation fees for misusing the airport VIP facilities, in addition Basil is a petrol shet employee in USA, so his employer should be informed of these violation of his employee, and take legal actions accordingly.

    ReplyDelete

Powered by Blogger.