மொராக்கோ அணி எனும்போது நினைவுக்கு வருவது
மொராக்கோ அணி உலகக் கால்பந்துக் கோப்பையில் காலடி வைக்கும் போதெல்லாம் அந்நாட்டு ரசிகர்களின் நினைவுக்கு வருவது பிரபல பிரேசில் பயிற்றுவிப்பாளர் (மஹ்தி) ஜோஸி ஃபாரியா தான்.
1986 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்து உலகக் கால்ப்பந்து கோப்பை போட்டியில் மொரோக்கோ அணி போர்த்துகீசிய அணியை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு அதனை தகுதி பெற வைத்த பெருமை அவரையே சாரும். அதன் மூலம் முதன் முதலில் ஒரு அரேபிய ஆபிரிக்க அணி ஒன்றை உலகக் கோப்பை வரை கொண்டு வந்தவரும் அவர்தான்.
பின்னர் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொண்ட அவர், தனது பெயரை மஹ்தி என மாற்றிக் கொண்டு மொரோக்கோ குடியுரிமையும் பெற்று 2013 ஆம் ஆண்டு அங்கேயே மரணித்தார்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment