பெண் பொலிஸார் மீது, கடுமையாக செயற்பட்ட அதிகாரி சிக்கலில் மாட்டினார்
பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் கடுமையாக நடந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் நடத்தை தொடர்பில் வெளியாகும் காணொளிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பில் சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு பெண்கள் பேரணியொன்றை ஆரம்பித்தனர்.
குறித்த பெண்களை பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்ய தயாராகி கொண்டிருந்த போது, அவர்களை கைது செய்ய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்வரவில்லை என குற்றம்சாட்டி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கோபமாக நடந்து கொள்வது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்த அனைத்து தகவல்களையும் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே தீர்மானமொன்றை எடுக்கமுடியும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
பாதுகாப்புத்துறையின் தீர்ப்பு இப்படியும் வரலாம். அதாவது அந்த பொலிஸ் பெண் ஏதோ மயக்கம் வருவதுபோல் தென்பட அந்த அதிகாரி அந்தப் பெண் பொலிஸின் கழுத்தில் உள்ள சட்டையைப் பிடித்து அசைத்து நினைவு வர உதவி செய்திருக்கின்றார். அதைக்காணொளி எடுத்தவர்கள் அந்த இந்த செய்திகளைப் பரப்பி வீண் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிசெய்திருக்கின்றனர்.
ReplyDelete