அவுஸ்திரேலியாவிடம் மன்னிப்பு கோரினார் விளையாட்டு அமைச்சர்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் 'பொறுப்பட்ட தனிப்பட்ட செயலுக்கு' அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில், விளையாட்டு துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் மன்னிப்புக் கோர விரும்புவதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். "நான் மிகவும் கவலையடைகிறேன், இது தொடர்பில் தேவையான மற்றும் சரிசெய்வதற்கான பொறுப்பை எனது நாடு மற்றும் அதன் மக்கள் சார்பாக நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
வழக்கு அதன் ஆரம்ப கட்டத்திலும், நிலுவையிலும் இருக்கும் வேளையிலும் அமைச்சர் இந்த மன்னிப்பை கோரியுள்ளார்.
Post a Comment