Header Ads



இளைய பெண் ஒட்டகச்சிவிங்கி திடீரென உயிரிழப்பு - பிரேதப் பரிசோதனைக்கு நடவடிக்கை


தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள பெண் ஒட்டகச்சிவிங்கி இன்று (22) அதிகாலை 5.30 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் தெரிவித்துளார்.


​​தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் மொத்தமாக மூன்று பெண் ஒட்டகச்சிவிங்கிகள் இருந்தன 19, 21, 23 வயது உடையவைகள். அவற்றுள் இளைய ஒட்டகச்சிவிங்கியை உயிரிழந்துள்ளது.


மிருகக்காட்சிசாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் இயக்குநர்கள் இணைந்து பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.