வங்கிக்குள் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட. வங்கி முகாமையாளர்
ஹக்மானாவின் சனச வங்கியின் முகாமையாளரான 22 வயதுடைய பெண் ஒருவர் வங்கி வளாகத்தினுள் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் நேற்று மதியம் கத்தியால் வெட்டி கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை அடுத்து வங்கி முகாமையாளர் கங்கோடம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொலையின் பின்னர் தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய ஹக்மன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment