Header Ads



கனடாவில் இருந்து வந்த குடும்பம், யாழ்ப்பாணம் செல்லுகையில் குருநாகலில் பேரதிர்ச்சி


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வாடகை வாகனத்தில் சென்ற குடும்பம் ஒன்றின், கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பயணப்பொதிகளுடன் வாகனத்தின் சாரதி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக அந்த குடும்பத்தினர் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். கனடாவில் இருந்து வந்த சிலர் யாழ்ப்பாணம் சென்றுக்கொண்டிருந்த போது, குருணாகல் பிரதேசத்தில் ஓரிடத்தில் மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.


அப்போது வாடகை வாகனத்தின் சாரதி தமது பயணப்பொதிகளுடன் காணாமல் போனதாக குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


இவர்கள் யாழ்ப்பாணம் செல்வாற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வாடகைக்கு அமர்த்தவில்லை என்பதால், வாகனம் சம்பந்தமான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.


மதிய உணவு சாப்பிட வருமாறு சாரதியை அழைத்த போதிலும் அவர் மறுப்பு தெரிவித்து வாகனத்திலேயே இருந்துள்ளார்.


குடும்பத்தினர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது, தமது கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த 9 பொதிகளுடன் சாரதி காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இது சம்பந்தமான பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டு, அவர்கள் வேறு ஒரு வாடகை வாகனத்தில் யாழ்ப்பாணம் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.tw

1 comment:

  1. இது உண்மையில் மிகவும் கவலையான வெறுக்கத்தக்க சம்பவம். இது போன்ற சாரதிகளை ஒருபோதும் வாடகைக்கு அமர்த்தக்கூடாது. ஆனால் அவர் பற்றி அறிந்து கொள்ள எந்த உத்திகளும் இல்லை. இதனால் தான் கனடா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் இருந்து இலங்கை போன்ற அருவருப்பான நடத்தைகள் அதிகமாகக் கொண்ட நபர்கள் வாழும் நாட்டுக்குப் பயணம் செய்யும் போது அனைத்தையும் அவர்கள் ஆரம்பத்திலிந்தே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். விமானநிலையத்தில் பதிவு செய்த அல்லது வௌியில் இருக்கும் போதே பஜட் போன்ற சர்வதேச டாக்ஸிகள் நிறுவனங்களில் முற்பதிவு செய்து பயணம் செய்தால் அவர்களையும் அவர்களுடைய பொருட்களுக்கும் பாதுகாப்புக் கிடைக்கும். அது தவிர ஒருபோதும் சிறிய தொகை பணத்தைச் சேமிக்கும் அற்ப நோக்கில் செயல்பட்டால் இது போன்ற இழப்புகளையும் அவசியமற்ற கவலைகளையும் காலநேரங்களையும் வீணாக்க வேண்டிவரும். இந்த துரதிருஷ்டமான சம்பவத்தை நாம் அதில் ஈடுபட்ட சாரதியைும் அவனுடைய தீய செயலையும் வன்மையாகக்கண்டிக்கும் அதே நேரம் இது உலகில் பலநாடுகளிலிருந்தும் இலங்கை வருவதற்குத் திட்டமிடுபவர்கள் சிறந்த ஒரு பாடமாகக் கொள்ளட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.