Header Ads



வறிய வகுப்பினர் நிலத்தில் புதைப்பு, பசிலின் ஆதரவாளர்களுக்கு நிச்சயமற்ற நிலை


 பசில் ராஜபக்சவை சுற்றி இருந்து அரசியலில் ஈடுபட்ட குழுவினர் வரவு செலவுத்திட்டத்தின் போது தமது அழுத்தங்களை வெளியிட தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்திற்கு அமைய இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையில் அரசியலில் ஈடுபட முடியாது. இதன் காரணமாக பசில் ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வந்தவர்கள் நிச்சயமற்ற நிலைமையில் இருக்கின்றனர்.


22வது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதி, பசில் ராஜபக்சவின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.


பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தின் முதல் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்து விட்டு, எதிர்காலத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக இறுதி வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களிக்க முடியும்.


அரசாங்கத்தின் வரி கொள்கை காரணமாக நாட்டின் வறிய வகுப்பினர் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளனர். வறிய மக்கள் இருதய நோயால் இறப்பது அதிகரித்துள்ளது எனவும் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.