பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை, சுட்டுக் கொன்றதாக இந்தியா அறிவிப்பு
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானம் பறக்கும் சத்தம் கேட்டதையடுத்து, பிஎஸ்எஃப் வீரர்கள் அந்த ஆளில்லா விமானத்தை சுட்டுக் கொன்றதாக பிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, காவல்துறை மற்றும் தொடர்புடைய அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏஎன்ஐ நிறுவனம் அளித்திருக்கும் தகவலின்படி, 2.5 கிலோ எடையுள்ள இரண்டு போதைப்பொருள் பாக்கெட்டுகள் ட்ரோனில் இருந்து மீட்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சமீபத்தில், எல்லைக்கு அப்பால் இருந்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினருடன் மத்திய அரசு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டது.
இந்த அடிப்படையில் மேலும் ஓர் ஆளில்லா விமானத்தை இடைமறித்து கடத்தல் முயற்சியை முறியடித்ததாக எல்லைப் பாதுகாப்பப்படை கூறுகிறது. BBC
Post a Comment