Header Ads



பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை, நம்பியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்


Mobile Body Massage சேவை வழங்குவதாக பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்து விட்டு, அங்கு சென்ற இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டு அவரது உடைமைகள் களவாடப்பட்டுள்ள சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.


குறித்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, Mobile Body Massage சேவையை பெற்றுக்கொள்ள  கடற்கரைக்கு சென்ற இளைஞன் தாக்கப்பட்டு அவரது, கையடக்கத் தொலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.


இதில், களுத்துறை வடக்கு மற்றும் வஸ்கடுவ பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் முகநூல் பக்கத்தில் பெண்களைப் போன்று வேடமணிந்து “Mobile Body Massage”  செய்வதாக விளம்பரம் செய்து நாகசந்தியா கடற்கரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.


இதையடுத்து, வஸ்கடுவ வாடியமன்கட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

No comments

Powered by Blogger.