Header Ads



மாணவர்களுக்கு போதை மருந்து விற்ற, ஆசிரியர் பிடிபட்டான் - 1,299 வில்லைகள் மீட்பு


களுத்துறை தெற்கில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1,299 மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபர், களுத்துறையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வருவதுடன், மாவனெல்லையில் நிரந்தர வதிவிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



No comments

Powered by Blogger.