தேர்தலில் வெற்றிப்பெற என்னை கைது செய்தவர், மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்
தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவே, கோட்டா தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து 7 மாதங்கள் தடுத்து வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டுவிட் செய்துள்ள ரிஷாட், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் தன் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.
அடுத்தத் தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்து என்னை 7 மாதங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருந்தார்.
எவ்வாறாயினும், பதவிக்காலம் முடிவதற்குள் நாட்டு மக்களால் கோட்டாபய ராஜபக்ஷ விரட்டியடிக்கப்பட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் நான் விடுதலை அடைந்தேன். உடனடியாக இல்லை என்றாலும் உண்மை கண்டிப்பாக வெற்றிபெறும் எனவும் ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment