Header Ads



நாட்டுக்கு வந்த பசில், ரணிலுடன் முக்கிய பேச்சு


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளர்.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


விக்ரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.


உத்தேச அமைச்சரவை நியமனம் குறித்து தீர்மானம் எடுக்கும் நோக்கில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்படவுள்ளது. அண்மையில் விடுமுறைக்காக பசில் ராஜபக்ச அமெரிக்கா பயணம் செய்துள்ளார்.


தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பன காரணமாக பசில் அவசரமாக நாடு திரும்புவதாக மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


பசிலின் வருகையின் பின்னர் அமைச்சரவை நியமனம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.