வெளியில் தெரியவராத அரசியல் இரகசியங்களை, போட்டுடைக்கப்போகும் மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதுவரை வெளியில் தெரியவராத அரசியல் இரகசியங்கள் அடங்கிய புத்தகமொன்றை எழுதி வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் எழுதியுள்ள புத்தகத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பவங்கள் குறித்து தான் எழுதும் புத்தகத்தில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் சென்றடையாத சில சம்பவங்கள் தான் எழுதும் புத்தகத்தின் மூலம் வெளிவரும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அந்த புத்தகத்தில் வௌியிடவேண்டிய மிக முக்கியமான சில நிகழ்ச்சிகளை இணையத்தளங்களில் பகிரங்கமாக வௌியிடப்பட்ட மைத்திரியின் விளையாட்டுக்கள் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். முதலில் ஸஹ்ரானின் தற்கொலைத் தாக்குதல்களுக்குத் தேவையான அனைத்தையும் ஒழுங்கிபடுத்திவிட்டு ஏன் சிங்கப்பூர் சென்றீர்? சிங்கப்பூர் செல்ல முன்னைய நாள் பத்திரிகைகளுக்குச் செய்தி வௌியிட்ட மைத்திரி அடுத்த சில நாட்களில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடைபெறும் என கூறிய அந்த எதிர்பாராத நிகழ்ச்சிகள் என்ன? நாட்டு மக்கள் கொலைசெய்யப்பட்டு முக்கிய கேந்திர நிலையங்கள்,ஹோட்டல்கள் தாக்கப்பட்டபோது ஏன் நீர் உடனே நாடு திரும்பவில்லை என ஜனாதிபதி கமிசன் கேட்ட போது எனக்கு விமானங்களில் இடம் கிடைக்கவில்லை எனக்கூறிய போது ஜனாதிபதி கமிசன் விமானங்களில் விசாரணை செய்தபோது போதிய மூன்று விமானங்கள் இலங்கை வரவிருந்தும் அந்த எதுவிலும் நீர் ஏறவிரும்பவிலலை. அது ஏன்? அதற்கச் சரியான பதில் இல்லை. பாராளுமன்றத்தில் அங்கம்வகித்த பிரபல துவேசியான தேரருடன் சேர்ந்து கொண்டு 4 கோடி இலஞ்சம் எடுத்துக் கொண்டு கொலைக்குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துக் கொணடிருந்த சிறைக்கைதியை விடுதலை செய்து அவனை வௌிநாட்டுக்கு அனுப்பி வைத்ததற்கு சட்டத்தில் என்ன இடமிருக்கின்றது.மதுபானத்தைத் தடை செய்யும் பெயரில் மைத்திரியின் மகள் மூலமாக எத்தனை மதுபானம் விற்க அனுமதிப்பத்திரங்களை அரசின் மூலம் பெற்றுக் கொடுத்தீர்கள்/ இன்னும் ஆயிரமாயிரம் மோசடிகள் மறைக்கப்பட்டுள்ளளன
ReplyDelete