சருமத்தை வெண்மையாக்க கிரீம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கிரீம் வகைகள் சரும சிக்கல்களை ஏற்படுத்துவதாக தோல் நோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ ஹூலங்கமுன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சமூகத்தில் பலர் இவ்வாறான முகப்பூச்சுக்களை பயன்படுத்துவதில் முனைப்புடன் இருக்கின்றனர்.
மேலும் இதுபோன்ற அழகுசாதனப் பொருட்களை முகத்தில் பயன்படுத்துவதால் பருக்கள் மற்றும் தேவையற்ற முடிகள் ஏற்படும்.
கண்களைச் சுற்றி இதுபோன்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் கண் அழுத்தத்தை அதிகரித்து கண்புரை கூட ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. TW
முறையான வைத்திய தரத்தில் இல்லாத இவ்வாறான முகப்பூச்சுக்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் விஷத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment