நான் நிரபராதி, பாலியல் குற்றச்சாட்டை மறுக்கிறேன்
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தன்மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் தான் நிரபராதி என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் சட்டத்தரணி ஒருவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் சட்டத் தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தனுஷ்கவின் வழக்கை கையாண்ட சட்டத்தரணி ஆனந்த அமரநாத் வழக்கில் இருந்து நீக்கப்பட்டதாகவும், குணதிலக்க சார்பில் சட்ட செலவுகளை செலுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்ததையடுத்து வழக்கை தொடர்வதற்காக மற்றுமொரு சட்டத்தரணி இன்று முதல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையால் பணியமர்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Post a Comment