உயிர் தப்பி இருக்க மாட்டேன் - இம்ரான் கான்
“தனது காலில் 4 துப்பாக்கி குண்டுகள் துளைத்தன” என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த பேரணியில் பங்கேற்ற இம்ரான்கான், நவேத் என்ற இளைஞரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இதில், அவருடைய காலில் குண்டுகள் பாய்ந்தன. லாகூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
காலில் இருந்து தோட்டாக்கள் அகற்றப்பட்டு, அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் அவரது கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இம்ரான் கானை சுட்ட நவேத், வாக்குமூலம் அளிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது தொடர்பாக சில பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து முதல் முறையாக நாட்டு மக்களுக்கு இம்ரான் கான் நேற்றிரவு உரையாற்றியுள்ளார்.
அதில், “தனது வலது காலில் 4 குண்டுகள் துளைத்தன எனவும் தன்னை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக ஒருநாளைக்கு முன்பாகவே எனக்கு தகவல் கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.
மேலும்,“தன்னை சுடுவதற்கு 2 பேர் வந்திருந்தனர் எனவும் மற்றொருவரும் சுட்டு இருந்தால், தான் உயிர் தப்பி இருக்க மாட்டேன். இது திட்டமிட்டு நடந்த சதி. இது பற்றி ஆதாரங்களுடன் விளக்குவேன்,’ எனவும் தெரிவித்துள்ளார். TW
Post a Comment