“நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் போராட்டங்கள் எதற்கு” - ரணில்
போராட்டங்கள் மூலம் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்கு எதிராக எதிரணி அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சிவில் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. அதனால் அவர்கள் இப்போது போராட்டங்களை விரும்பவில்லை.
எதிரணி அரசியல்வாதிகளும், அவர்களின் சகாக்களும் தான் இப்போது வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர்.
எதிரணியினர் தங்கள் சுயலாப அரசியலுக்காகவே போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் போராட்டங்களால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
அவசியமற்ற இந்தப் போராட்டங்களை நிறுத்தி விட்டு, நாட்டை மீளக்கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என்று எதிரணிக்கு நான் மீண்டும் அழைப்பு விடுகின்றேன்"என தெரிவித்துள்ளார். Tw
Post a Comment