விபத்தில் சிக்கிய யாசகரிடமிருந்து, மீட்கப்பட்ட பெருமளவு பணம் - 5 வங்கிகளின் கணக்குப் புத்தகங்களும் மீட்பு
கொழும்பு-புத்தளம் பிரதான வீதியில் ஆராச்சிக்கட்டுவ ஆனவிழுந்தாவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் வைத்தே, மோட்டார் சைக்கிளுடன் அந்த யாசகர் மோதுண்டு, கீழே விழுந்துவிட்டார்.
அதன்பின்னர், தனது இடுப்பில் வைத்திருந்த பணத்தாள்களும் கீழே விழுந்துவிட்டன. அவர் வைத்திருந்த பையை சோதனைக்கு உட்படுத்திய போது, ஐந்து வங்கிகளின் கணக்குப் புத்தகங்களும் இருந்துள்ளன.
அவற்றை மீட்டெடுத்த அங்கிருந்த இளைஞர்கள், அனைத்தையும் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விபத்துக்கு உள்ளான 65 வயதான யாசகர் கடும் காயங்களுக்கு இலக்கான நிலையில் ஆனவிழுந்த வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் ஏனைய இளைஞர்களும் அனுமதித்துள்ளனர்.
அவரிமிருந்த நாணயக்குற்றிகள் உள்ளிட்ட நாணயத்தாள்களை எண்ணுவதற்கு இரண்டு மணிநேரம் எடுத்தது என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
அவற்று மேலதிகமாக, 5,000, 1,000 மற்றும் 500 ரூபாய் தாள்களும் இருந்துள்ளன. இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார், அவ்விளைஞர்களை பாராட்டியுள்ளனர்.
யாசகர், மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இன்று (07) மரணமடைந்து விட்டார்.
மீட்கப்பட்ட பணம் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகங்களை யாசகரின் குடும்பத்தினரை தேடியறிந்து அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment