பொலிஸ் சார்ஜன்டை அடித்துக்கொன்ற மக்கள் - நடந்தது என்ன..?
கெப்பித்திகொல்லாவயில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெப்பித்திக்கொல்லாவ – ரம்பகெப்புவெவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பகுதியை சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கெப்பித்திக்கொல்லாவ பகுதியில் காட்டு யானை தாக்கி நேற்று மாலை ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீதியை மறித்து பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, கெப்பத்திகொல்லாவ பொலிஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சுற்றிவளைத்த பிரதேச மக்கள், கூரான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட், கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டார்.
எனினும், வழியில் அவரின் நிலை கவலைக்கிடமானதால், மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
Post a Comment