உலக சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்தது
உலக சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.56 டொலர் வீழ்ச்சியடைந்து, 80.08 டொலராக பதிவாகியுள்ளது.
பிரன்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 2.16 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது 87.62 டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை கடந்த நாட்களில் பிரன்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.81 டொலராக பதிவாகியிருந்தது.
Post a Comment