Header Ads



கபூரியா அரபுக்கல்லூரி மாணவர்கள் நிர்க்கதி - புதிய அதிபரும் நியமனம் - நீதிமன்றில் பொய்யைக்கூறி அராஜகம்



(ஏ.ஆர்.ஏ.பரீல்)

மஹ­ர­க­மயில் அமைந்­துள்ள கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியில், மாவட்ட நீதி­மன்றின் இடைக்­கால உத்­த­ர­வி­னை­ய­டுத்து கல்­லூரி நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களால் எடுக்­கப்­பட்­டுள்ள அதி­ரடி நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக கல்­லூரி மாண­வர்கள் அதி­ருப்­திக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


கல்­லூ­ரியின் அதி­ப­ராக இது­வரை காலம் பத­வியில் இருந்­த­வர்­களின் அதி­கா­ரங்கள் பறிக்­கப்­பட்ட நிலையில் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளினால் புதிய அதிபர் ஒரு­வரும், உப அதிபர் ஒரு­வரும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.


கல்­லூரி நம்­பிக்கை பொறுப்­பாளர் சபை­யினால் கொழும்பு மாவட்ட நீதி­மன்றம் மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட இடைக்­கால உத்­த­ரவின் பேரிலே இந்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.


கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது, தடை செய்­யப்­பட்ட இஸ்­லா­மிய நூல்கள் போதிக்­கப்­ப­டு­கின்­றன என்ற குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்தே கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. கொழும்பு மாவட்ட நீதி­மன்றம் கடந்த 4 ஆம் திகதி 14 நாட்­க­ளுக்கு இந்த இடைக்­கால உத்­த­ர­வினை வழங்­கி­யுள்­ள­தாக சட்­டத்­த­ரணி சபீனா மஹ்ரூப் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியில் உண்­மையில் தடை­செய்­யப்­பட்­டுள்ள இஸ்­லா­மிய நூல்கள் மாண­வர்­க­ளுக்குப் போதிக்­கப்­ப­ட­வில்லை என்றும் எதிர்­வரும் 18 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள விசா­ர­ணை­யின்­போது இதனை வாதத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். நீதி­மன்றின் குறிப்­பிட்ட உத்­த­ரவு நேற்று முன்­தினம் கல்­லூரி அதி­ப­ருக்கு வழங்­கப்­பட்­டது.


இந்­நி­லையில் நேற்று புதிய முகா­மைத்­துவக் குழு என்று கூறிக்­கொள்ளும் ஏழுபேர் நம்­பிக்கைப் பொறுப்­பாளர் ஒரு­வ­ருடன் சென்று கல்­லூரி அதி­பரைச் சந்­தித்து இன்று முதல் இவர் தான் புதிய அதிபர் என்று ஒரு­வ­ரையும், உப அதிபர் என்று ஒரு­வ­ரையும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் புதிய அதி­ப­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறும் பழைய அதி­பரைக் கோரி­யுள்­ளனர்.


மாண­வர்­களின் கணினி அறையை பூட்­டி­யுள்­ளனர். அதிபர் காரி­யா­ல­யத்­துக்கு இரு பூட்­டுக்கள் இடப்­பட்டு வெவ்­வேறு சாவிகள் பழைய அதி­ப­ருக்கும் புதிய அதி­ப­ருக்கும் வழங்­கப்­பட்­டுள்­ளன. பழைய அதிபர் தொடர்ந்தும் கல்­லூ­ரி­யிலே தங்­கி­யி­ருக்­கிறார். அவர் விலக்­கப்­ப­ட­வில்லை என கபூரியா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஐ.எல்.டில்சாட் மொஹமட் தெரிவித்தார்.


இவ்வாறான நிலையில் கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது கல்லூரியில் சுமார் 60 மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

No comments

Powered by Blogger.