Header Ads



தனது நாட்டில் வபாத்தான இலங்கையர் பற்றி தென்கொரியா வழங்கியுள்ள உறுதி


தென் கொரியாவின் சியோலில் உள்ள இடாவோனில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 27 வயதான மொஹமட் ஜினத்தின் குடும்பத்துக்கும் அவரது இறுதிச் சடங்குகளுக்கும் நிதியுதவி வழங்க கொரிய அரசாங்கம் முன்வந்துள்ளது.


கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கண்டி உடத்தலவின்னவைச் சேர்ந்த குறித்த இளைஞரின் குடும்பத்தினருக்கு கொரிய அரசாங்கம் மற்றும் கொரிய மக்கள் சார்பாக கொரிய தூதுவர் சந்துஷ் வூஜின் ஜியோங் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். 


தூதுவர் நேற்று (3) பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்து தமது அரசாங்கத்தின் சார்பாக இரங்கலைத் தெரிவித்தார்.


ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போதான கூட்ட நெரிசலில் 26 வெளிநாட்டவர்கள் உட்பட 156 பேர் உயிரிழந்தமைக்கும், காயமடைந்தவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக தமது அனுதாபங்களையும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.