வீரவங்சவின் கருத்தை குப்பைக்கு ஒப்பிட்டுள்ள வெளிநாட்டுத் தூதரகம்
உத்தர லங்கா சபையின் தலைவர் விமல் வீரவங்சவின் கருத்துக்கள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த வாரம் குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த நிலையில், நாட்டை விட்டு செல்வதற்கு முன்னர் அவரை கொலை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக விமல் வீரவன்ச, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த செயற்பாட்டுக்கு அமெரிக்காவின் தூதுவரும் பங்காக இருந்தார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த குழப்பமான தகவல்களை வெளியிட்டதையடுத்து, இந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த கருத்தை அமெரிக்க தூதரகம் முழுமையான குப்பை என்று நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
American Embassy in Colombo has very precisely mentioned the true status of Buruwansa, let me tell the all world including American Embassy, Buruwansa is part and partial of the Garbage, very bad and nastey smell spread all over when this part is taken out of the garbage. Even the public of this country knows very well that Buruwansa is nothing but a part and partial of the dustbin and garbage.
ReplyDelete