கபூர் மாமா, சாதிக் அப்துல்லா ஆகியோருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு
- இர்ஷாத் றஹ்மத்துல்லா -
புத்தளம் லெக்டோஸ்தோட்டத்தில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் இரு சந்தேக நபர்களினது பிணைகளை புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று -16- நிராகரித்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மாவனல்லை சிலை உடைப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் புத்தளம் லெக்டோஸ் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 6 பேரில் இருவருக்கு ஏற்கனவே புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை மேற்படி பினை தொடர்பிலான நகர்த்தல் பத்திரத்தின் மீதான தீர்ப்பினை வழங்குமாறு கோறி சட்டத்தரணி ருஸ்தி ஹபீபினால் கோறிக்கை முன்வைக்ப்பட்டிருந்த நிலையில் 3 ஆம்,4ஆம் சந்தேக நபர்களான கபூர் மாமா மற்றும் சாதிக் அப்துல்லா ஆகியோரின் பிணை தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
மூவரடங்கிய டிரையல் அட் பார் நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த பிணை தொடர்பிலான கோறிக்கை முன்வைக்கப்பட்டிருந்த்து.
இந்த நிலையில் இவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வேறு நீதிமன்றில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதாலும், இவர்களுக்கு பிணை வழங்குவதற்கு போதுமான விசேட காரணிகள் எவையும் இல்லை என்பதாலும், இவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பொலீஸ் அதிகாரிகளின் கொலை தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதாலும் பிணை வழங்க முடியாது என்றும் மூவரடங்கிய நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 25.26,27 ஆகிய தினங்களில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.இதே வேளை நிதிமன்ற நடவடிக்கைகள் சந்தேக நபர்களுக்கு விளங்கும் வகையில் தமிழ் மொழி மொழிபெயர்ப்புக்களுடன் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment