படுதோல்வி அடைவதை முன்கூட்டியே அறிந்தே அரசாங்கம்
நாடாளுமன்றத்தில் நேற்று (19.11.2022) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 8000 உறுப்பினர்களை கொண்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை 4000ஆக குறைக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
ஜனாதிபதி ரணில் பிரதமராக பதவி வகித்த போது அவர் தான் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்.
கடந்த நான்கு வருட காலத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளமை சந்தேகத்துக்குரியது.
தேர்தல் முறைமை ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த தன்மையே மாகாண சபை தேர்தலுக்கும் நேர்ந்தது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் இயங்குகின்றன.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகள் தேர்தல்கள் முறைமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை கருத்திற்கொள்ளாமல் மாகாண சபைகள் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
இதனால், அரசியலமைப்பின் விதிவிதானங்கள் மறுக்கப்பட்டுள்ளன. மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றிபெற்றால், அரசாங்கம் பொதுத் தேர்தலையும் பிற்போட அவதானம் செலுத்தும். இந்த அரசாங்கத்துக்கு மக்களாணை கிடையாது.படுதோல்வி அடைவதை முன்கூட்டியதாக அறிந்தே அரசாங்கம் தேர்தலுக்கு செல்ல அச்சமடைகிறது.
இதேவேளை தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். TWin
Post a Comment