Header Ads



இலங்கை போக்குவரத்து சபையில் அமைதியின்மை


2022 ஆம் ஆண்டு அரச முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சம்பள பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று நாரஹேன்பிட்டியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அரச முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க சம்பள சுற்றறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 


இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் நாடளாவிய ரீதியில் பணிபுரியும் ஊழியர்கள் குழுவொன்று நாரஹேன்பிட்டியில் உள்ள பிரதான காரியாலயத்திற்கு முன்பாக ஒன்று கூடி சுற்றறிக்கையை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சம்பள சுற்றறிக்கையின் ஊடாக, தகுதியற்ற உத்தியோகத்தர்கள் அதிக சம்பளம் பெறுவதாக இந்தக் குழு குற்றம் சுமத்தியது.


இக்குழுவினர் போக்குவரத்து சபை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, ​​போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்தினுள் இருந்து 2006 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க சம்பள சுற்றறிக்கையின் படி சம்பளம் பெறும் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


பின்னர் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்


இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறித்த இடத்திற்கு சென்று பிரதான காரியாலயத்திற்கு வெளியில் இருந்த ஊழியர்களுடன் கலந்துரையாடிய பின்னர் போக்குவரத்து அமைச்சில் அவர்களது பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

No comments

Powered by Blogger.