மனது வலிக்கிறது, மெஸ்ஸி வருத்தம்
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. .
இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின.
முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.
36 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த அர்ஜென்டினாவின் வெற்றிக்கு சவுதி அரேபியா முட்டுக்கட்டை போட்டது. தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை 51-வது வரிசையில் உள்ள சவுதி அரேபியா வீழ்த்தியது யாருமே எதிர்பார்க்காத ஒன்றாகும். தோல்விக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான மெஸ்ஸி நிருபர்களிடம் கூறியதாவது:-
சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் மனது வலிக்கிறது. சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். அதே நேரத்தில் தோல்விக்கு சாக்குகள் எதுவும் கூற விரும்பவில்லை. நாங்கள் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாட இருக்கிறோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சிப்போம். இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.
Post a Comment