நாளை எகிப்துக்கு பறக்கிறார் ரணில்
காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 (27th Conference of the Parties of the UNFCCC) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (06) எகிப்திற்கு பயணமாகவுள்ளார்.
எகிப்தின் Sharm El-Sheikh-இல் நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பிரதான நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றம் தொடர்பான யுக்திகள் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிச்சை கேட்கும் படலத்தை சர்வதேச மட்டத்தில் கொழும்பு- கெய்ரோ- கொழும்பு என்ற விமான டிக்கட் மூலம் ஒரே செலவில் செய்து முடிக்கலாம் என்ற கற்பனையில் எகிப்து செல்லும் ரணிலுக்கு மற்றொரு ஏமாற்றம் காத்திருக்கின்றது. ஏற்கனவே, எகிப்து கடும்வறுமையில் மத்திய கிழக்கு குறிப்பாக சவூதி அரேபியா, குவைத் நாடுகளின் நன்கொடைகளில் வாழ்ந்து இது போன்ற சர்வதேச மாநாடுகளை நடாத்தி டொலர் சம்பாதிக்கும் முயற்சியில் பல வ ருடங்களாக ஈடுபட்டுவருகின்றது. ஏனைய நாடுகளை விட இலங்கை கடும் வறுமையில் பசி பட்டினியில் வாடுவதாக பல வீடியோ காட்சிகள் இணையச் செய்திகளைக் கேட்டு இலங்கையின் ஆட்சியாளர்கள் பற்றி அந்த நாட்டு மக்கள் கடும் சீற்றத்தில் இருக்கும் நிலையில் இவர் அங்கே சென்றால் இயல்பாகவே 200 நாட்டுத் தலைவர்களும் நாட்டை இவர் ஆட்சி செய்யும் அத்தனை இரகசியங்களும் உலக மட்டத்தில் மிகவும் துல்லியமாக அவ்வப்போது எடுத்துக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.எனவே இலங்கைத் தலைவருக்கு அந்த மாநாட்டில் எந்தத் தலைவரும் சந்திக்கத் தயாராக இல்லை என்ற சமிக்ஞை அவர் அங்கு சென்றேபாதுதான் புலப்படும். நட்சத்திர தரத்திலான ஹோட்டல்கள் எகிப்தில் மிகவும் விலை அதிகம். எனவே, எகிப்தில் ஒரு வாரத்துக்கு மேலாக தங்கி ஏமாந்து், சலித்துத் திரும்புவதற்கு பொதுமக்களின் வயிற்றைக் கட்டிக் கொண்டு உழைத்து வரியாகச் செலுத்திய சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட வௌிநாட்டுச் செலாவணியை மண்ணாக்கிவிட்டு வெறும் கையுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பி வரலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. நாம் பொறுத்திருந்து நிலைமைகளை நிதானமாக அவதானிப்போம்.
ReplyDelete