ஹர்ஷவின் எச்சரிக்கை
நாடு பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள தற்போதைய நிலையில், வழமையாக சமர்ப்பிக்கும் வரவு செலவு திட்டத்தையே இம்முறையும் அரசாங்கம் சமர்ப்பித்தால் நாடு பேரழிவை சந்திக்கும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த இரு வருடங்களில் பாரியளவில் அதிகரித்துள்ளது. எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் எந்தவிதமான பயனும் இல்லை எனவும் தெரிவித்தார்.
நாம் அரசியல்வாதிகள் என்பது உண்மையே, நாம் எதிர்க்கட்சியில் இருப்பதும் உண்மையே. இதற்காக அரசாங்கம் கொண்டுவரும் அனைத்து வேலைத்திட்டங்களையும் நாம் எதிர்க்கப்போவதில்லை என்றார்.
Post a Comment