மனசாட்சியுள்ள எவரும் தற்போது அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக் கொள்ள முடியாது
நாட்டின் குழந்தைகள் சரியான ஊட்டச்சத்தின்றி மயக்கமடைந்து விழும் நாட்டில்,இருண்ட எதிர்காலத்தால் அப்பாவி இளம் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறும் நேரத்தில்,ஒட்டுமொத்த மக்களும் வறுமையின் பிடியில் வாடும் நேரத்தில், உணர்வுள்ள, புரிதலுள்ள எவரும் அமைச்சுப் பதவிகளுக்கு,
சலுகை வரப்பிரசாதங்களுக்கு உட்பட முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் போது அமைச்சுப் பதவிகளை 15 ஆகவும் பிரதி அமைச்சுப் பதவிகளை 15 ஆகவும் மட்டுப்படுத்தி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
என்றாலும், மொட்டுவின் பலத்துடன் ஜனாதிபதி பதவிக்கு வந்த ஜனாதிபதியால் அவ்வாறு செயற்பட முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தீவிர முதலாளித்துவத்தாலையோ அல்லது தீவிர சோசலிசத்தாலையோ ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும்,சமூக ஜனநாயகம்,சமூகப் பொருளாதார கோட்பாட்டையே ஐக்கிய மக்கள் சக்தி பின்பற்றுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
இயலுமை,திறமை,நிபுனத்துவ ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment