Header Ads



இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் - பிரதம பௌத்த மதகுரு கோரிக்கை நிராகரிப்பு-



- Farook Sihan -


இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு  பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டட பிரதம  பௌத்த மதகுருவின் பிணை நிபந்தனை தளர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு  மீண்டும் குறித்த வழக்கானது   எதிர்வரும் டிசம்பர்  மாதம் 06 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம்  கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   விஹாரை ஒன்றில்   வைத்து 3 இளம் பிக்குகள்  பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு  கடந்த வெள்ளிக்கிழமை (04)கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் இரு தரப்பினர் சார்பிலும் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு மருத்துவ அறிக்கை மன்றிற்கு சமர்ப்பிக்கப்படாததன் காரணமாக  எதிர்வரும் டிசம்பர்    மாதம் 06 ஆம் திகதி வரை  மறுவிசாரணைக்காக குறித்த வழக்கினை  கல்முனை  நீதிமன்ற நீதிவான்  உத்தரவிட்டார். 


அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள்  கல்முனை பகுதி    விஹாரை ஒன்றில்    பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் செப்டம்பர் 13 ஆந் திகதி  கல்முனை சுபத்ரா ராமய   விகாராதிபதியாக  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு கல்முனை  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்   ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.


இதனடிப்படையில் கல்முனை  நீதிமன்ற நீதிவான்  கைதான  சந்தேக நபரான பௌத்த மதகுரு  தொடர்புபட்ட  3 வழக்குகளில்  தலா 3 பேர் வீதம்  9 பேர் கொண்ட  5 இலட்சம் பெறுமதியான  சரீரப்பிணையில் செல்ல வேண்டும்    மாதத்தின்   4 வாரம் வரும் ஒவ்வொரு  ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுதல் குறித்த வழக்கின் சாட்சிகள்  குடும்பத்தினரை   அச்சுறுத்துதல் வழக்கு தொடர்பிலான தலையீடு செய்யாதிருத்தல் வேண்டும் வெளிநாடு செல்வதற்கு தடை அதாவது கடவுச்சீட்டினை மன்றிற்கு ஒப்படைத்தல் வேண்டும்  அவ்வாறு தன்னிடம் கடவுச்சீட்டு  இல்லை எனின்    உரிய தரப்பினரின் உறுதிப்படுத்தி மன்றிற்கு தெரிவிக்க வேண்டும் கிராம சேவகரின் நலச்சான்றிதழ் சமரப்பிக்க வேண்டும் என்ற கடும் நிபந்தனையுடன் குறித்த  பௌத்த மதகுரு  பிணையில் விடுவித்து  உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில் வெள்ளிக்கிழமை(04)  இவ்வழக்கு மீண்டும்  விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது  மருத்துவ அறிக்கை மற்றும் வழக்கின் விசாரணை தொடர்பில்  இரு தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின்  சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள்  ஆராயப்பட்டதுடன்    சந்தேக நபரான தேரரின்  பிணை 

 நிபந்தனை தளர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு   மீண்டும் எதிர்வரும் டிசம்பர்   மாதம் 06 ஆந் திகதி வரை வழக்கினை  நீதிவான் ஒத்தி வைக்க  உத்தரவிட்டார்.


மேலும் குறித்த பாலியல் துஸ்பிரயோக வழக்கில்  பிரதான சந்தேக நபராக குறிப்பிடப்படும் கல்முனை சுபத்ரா ராமய   விகாராதிபதி சார்ப்பில் கடந்த தவணைகளில் முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான ஸ்ரீயானி விஜேவிக்கிரம தலைமையிலான சட்டத்தரணிகள் குழு   பிணைக்கோரிக்கை முன்வைத்து ஆஜராகி இருந்தமை  குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.