Header Ads



மகள் நீதிபதியாக வேண்டும், வாய் பேசமுடியாத பெற்றோரின் ஆசை - மாணவர்களுக்கு எப்படி வழிகாட்டாலாம் - சிறந்த உதாரணம் இதோ (படங்கள்)


 - Faudina Zameek (
Principal)


Ashfa என்ற இந்த மாணவி G.C.E O/L பரீட்சையில் 9 A சித்திகளை ப் பெற்றார்.

வழமை போன்று உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவைத் தெரிவு செய்வார் என அனைவரும் நம்பினார்கள்.

ஆனால் அவரது ஆசை வேறாக இருந்தது. G.C.E. சாதாரண தரப் பரீட்சைப் 

பெறுபேறுகளின் பின்பு என்னிடம் இந்த 

மாணவி,  தான் ஒரு சட்டத்தரணியாக வரவேண்டும் என்றும் அதற்குரிய " z" Score புள்ளிகளைப் பெறக் கூடிய பாடங்களைத் தெரிவு செய்து தரும் படியும்  கேட்டுக் கொண்டார்.

இம்மாணவி நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் வாசிப்பார்.அகில இலங்கை ரீதியாக ஆங்கில தினப் போட்டியில் creative writing நிகழ்ச்சியில் இரண்டு தடவைகள் முதலாம் இடத்தைப் பெற்றவர்.

எனவே அவருக்காக நாங்கள் தெரிவு செய்த பாடங்கள் ஆங்கில இலக்கியம்,

IT, Economics.

"என்னால் economics செய்ய முடியுமா ?"

என்பதே அவரது முதல் கேள்வியானது.

 ஆயினும் ஆசிரியர்களின் வழி காட்டலின் கீழ் முயற்சி செய்து 2021 ம் ஆண்டு பரீட்சை முடிவுகளின் படி 2.1 z புள்ளிகளைப் பெற்று மாத்தளை மாவட்டத்தில் ஆறாவது இடத்தைப் பெற்று சட்ட பீடத்திற்குத் தெரிவு செய்யப்படும் தகுதியைப் பெறுகின்றார். அல்ஹம்துலில்லாஹ்!

இவர் விரும்பினால் மொறட்டுவை பல்கலைக் கழகத்தில் IT துறையையும்

 தெரிவு செய்ய முடியும்.

இவரது தாய்,தந்தை இருவருமே பேச முடியாதவர்கள். அவரது இலட்சியப் படி அவர் ஒரு நீதிபதியாக வரவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

மற்றைய மாணவி இதே துறையைத் தெரிவு செய்த போதும் அவருக்காக நாங்கள் தெரிவு செய்த பாடங்கள் வேறு.

ஆங்கில இலக்கியம், புவியியல் , media & Communication.

மாணவிகளின் திறமைக்கு  ஏற்றவாறு சரியான  துறைகளையும், பாடங்களையும் தெரிவு செய்வதற்கும், வழி காட்டுவதற்கும் பிரத்தியேகமாக  குழு ஒன்று எங்கள் பாடசாலையில் இயங்கியது.

அக்ஷயா என்ற இந்த மாணவியும் 2021 ம் ஆண்டு பெறுபேறுகளின் படி

பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத் 

தெரிவு செய்யப்படக் கூடிய " z" புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

2021 இற்கான G.C.E சாதாரணப் பரீட்சைக்கான முடிவுகள் வெளிவரவுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவற்றைக் குறிப்பிடுவதற்கான முக்கிய காரணம், பல ஆண்கள் பாடசாலைகளில் இத்துறைகள் காணப்படுவதில்லை.

ஆனால் சிங்களப் பாடசாலைகளில் இத்துறைகள் பல காலமாகவே நடை முறையில் உள்ளன.

பல மாணவர்கள் இத்துறைகளில் பல்கலைக் கழகத்திற்குத்  தெரிவு செய்ய ப்படுகின்றார்கள்.

மாத்தளையில் St Thomas கல்லூரியில் மட்டும் இத்துறை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

கண்டியில் Trinity College, Dharmaraja, போன்ற பிரபல ஆண்கள் பாடசாலைகளில் இத்துறைகளினூடாக மாணவர்கள் பல்கலைக்  கழகம் 

 செல்ல வாய்ப்பு அளிக்கப்படுகின்றனர்.

காலத்துக்கேற்றவாறு பல்வேறு மொழிகளையும், கற்கும் வசதிகளையும் மாணவர்களுக்கு அளித்தால் சர்வதேச ரீதியாக அவர்களுக்ககான தொழில் வாய்ப்புகளும்,  பல்கலைக் கழக வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

ஜப்பான், ஜெர்மன் ரஷ்யன், ஃப்ரெஞ்ச், Chinese, அரபு  போன்ற மொழிகளையும் உயர்தரத்தில் அறிமுகம் செய்யுங்கள்.

ஆசிரியர்கள் இல்லை என்பதை விட உங்களுக்குள் உள்ள ஆசிரியர்களில் திறமையானவர்களை இனம் கண்டு அவர்கள் உயர் கல்வி கற்க வாய்ப்பளித்து   அவர்கள் மூலம் இப்பாடங்களை மாணவர்களுக்குக்  கற்பிக்க முடியும்.

பின்பு உங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை கல்வி அமைச்சினூடகப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆசிரியர் பற்றாக்குறையை நான் இவ்வாறே நிவர்த்தி செய்தேன் என்பதைப் பலர் அறிவர்.

இவ்விரு மாணவிகளும் வீட்டுக்கு வருகை தந்த போது எடுத்துக் கொண்ட படங்கள் இவை.



No comments

Powered by Blogger.