தென் கொரியாவில் சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில், அதிகமானவர்கள் எந்த வயதினர் தெரியுமா..? வடகொரியா வாய் திறக்கவே இல்லை
இறுதி சடங்கிற்கான செலவுகளை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது.
நெரிசலில் சிக்கி பலியானவர்களில் பெரும்பாலானோர் 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் பிரபலமான இரவு நேர கேளிக்கை நிகழ்வான ஹலோவீன் கொண்டாட்டம் இடம்பெற்ற மத்திய சியோல் நகரிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் எந்தவிதமான நோய் தடுப்பு பாதுகாப்பும் இன்றி மக்கள் கலந்து கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்ததற்கு இணங்க இடம்பெற்ற முதலாவது நிகழ்விலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த அனர்த்தம் குறித்த பூரண விசாரணை தற்சமயம் இடம்பெற்ற வருவதாக தென் கொரிய பிரதமர் ஹன் டக் சோ தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரடியாக சென்று அவதானித்த அவர், எதிர்வரும் காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாத வகையில் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மரணித்தவர்களில் 26 பேர் வெளிநாட்டவர்கள் என வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேபோன்ற அனர்த்த சம்பவம் ஒன்று ஹொங்கொங்கில் 30 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தற்போது தென் கொரிய மக்கள் நினைவுகூர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி புதுவருட கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் பெரும்பாலும் சிறுபராயத்தவர்கள் 21 பேர் கொல்லப்பட்டதுடன், 62 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இந்த அனர்த்தம் தொடர்பாக சர்வதேச ரீதியாக பலநாடுகள் தமது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் சம்பவம் நடைபெற்று 3 வது நாளான இன்று கூட வடகொரியா எந்தவிதமான அனுதாப செய்தி எதனையும் இதுவரை விடுக்கவில்லை.
இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட முறையில் தென் கொரியா மற்றும் அமெரிக்க இராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் பாரிய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
இலங்கையைப் போல் அன்றி இந்த பெரிய அனர்த்தத்தை சரியாகக் கணிப்பீடு செய்து இது போன்ற அனர்த்தங்கள் இதன் பிறகு ஏற்படாமல் இருக்க அத்தனை முன்னேற்பாடுகளையும் தென் கொரியா மேற்கொள்ளும். அந்த வகையில் மிகச்சிறந்த நிர்வாகமுறையும் நேர்மையும் கொரிய நாட்டு மக்களிடம் இருப்பதால் எதிர்காலத்தில் இது போன்ற அனர்த்தங்கள் தொடர மாட்டாது என்பதை மாத்திரம் நாம் உறுதியாகக் கூறலாம்.
ReplyDelete